அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - தம்பதி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-26 08:28 GMT

சென்னை,

அரியலூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக மோகன் என்பவரை அணுகியுள்ளார். இதற்காக தினேஷிடம் 9 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட மோகன், பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த பணி நியமன ஆணை போலி என்று தெரிய வந்ததையடுத்து, தினேஷ் குமார் சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மற்றொரு நபருக்கு போலி நியமன ஆணை கொடுக்க முயன்ற மோகன் மற்றும் அவரது மனைவி கவுசல்யாவை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 34 போலி பணி நியமன ஆணைகள், 48 அரசு முத்திரைகள், 8 போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்