கடன் சங்க செயலாளர்கள் திறனாய்வு கூட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் திறனாய்வு கூட்டம் நடந்தது;

Update:2023-08-18 00:15 IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான திறனாய்வு கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனையும் வழங்கப்பட்டன. இதில் மண்டல இணைப் பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், துணைப் பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள், மேலாளர்கள், உதவி கள மேலாளர்கள், சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்