ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-30 00:34 IST

அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கூண்டு அமைக்கப்பட்டுள்ள ஒரு சரக்கு வேனில் கீழ் பகுதியில் செம்மறி ஆடுகள் அடைக்கப்பட்ட நிலையில் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பியில் 4 பேர் அமர்ந்து கொண்டு ஆபத்தை உணராமல் தூங்கியவாறு பயணம் ெசய்தனர். இவ்வாறு பயணம் செய்யும்போது வேன் டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வேனின் பின்னால் செல்லும் வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனை போலீசார் கண்டு பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்