குல்பி ஐஸ்சில் செத்து கிடந்த 'ஈ'

ஆவின் பால் விற்பனை நிலையத்தில் குல்பி ஐஸ்சில் செத்து கிடந்த ‘ஈ’ யை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தாா்.;

Update:2023-04-11 00:15 IST

விழுப்புரம்:

விழுப்புரத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிலையம் ஒன்றில் குளுகுளு கோடை கொண்டாட்டம் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோடை காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆவின் ஐஸ் கிரீம், குல்பி ஐஸ் மற்றும் ஆவின் பால் பாக்கெட், நெய், பால்கோவா உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த ஆவின் விற்பனை நிலையத்தில் ஒருவர், 30 ரூபாய்க்கு குல்பி ஐஸ் வாங்கியுள்ளார். பின்னர் அந்த கவரை பிரித்து குல்பி ஐஸ்சை சாப்பிட முயன்றபோது, அதில் 'ஈ' ஒன்று செத்து இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே இதுபற்றி அவர், ஆவின் பாலக விற்பனையாளரிடம் கேட்டதற்கு, நாங்கள் ஆவின் பொருட்களை நேற்று தான் திறந்து எடுத்தோம். இதில் 'ஈ' எப்படி வந்தது என தெரியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் சொல்கிறோம் எனக்கூறினார்.

இதையடுத்து அந்த வாடிக்கையாளர் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து திரும்பிச்சென்றார். இதனிடையே குல்பி ஐஸ்சில் 'ஈ' இருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்