விவசாயிக்கு கொலை மிரட்டல்

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-30 00:14 IST

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 54). விவசாயி. இவரது தம்பி அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன்(50). இவர்கள் இருவருக்கும் இடையே நில பாகப்பிரிவினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜனை, பத்மநாபன் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்