திருச்சி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

திருச்சி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.;

Update:2023-03-23 19:57 IST

திருச்சி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

கோவிலுக்கு சென்றனர்

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கோனார்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ஆனந்தாயி (வயது 57). இவரும், இவரது மருமகளான கோவிந்தன் மனைவி சகுந்தலா (28), பேத்தி தாவனாஸ்ரீ (9) மற்றும் எடப்பாடி பொன்பாளையத்தை சேர்ந்த திருமுருகன் (29) ஆகியோர் கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் ஒரு காரில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மகாலிங்கம் கோவிலுக்கு பரிகார பூஜை செய்வதற்காக புறப்பட்டு வந்தனர். காரை டிரைவர் எடப்பாடி தாலுகா, கரட்டுப்புதூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (31) ஓட்டினார். அந்த கார் நாமக்கல் வந்தபோது அங்கு ஆனந்தாயியின் உறவினர்களான நாமக்கல் மாவட்டம் தேத்தம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி (58), இவரது மகன் தனபால் (36), உப்புக்குளத்தை சேர்ந்த அப்பு என்ற முருகேசன் (55), அதே பகுதியை சேர்ந்த ராசுவின் மகன் திருமூர்த்தி (43) ஆகிய 4 பேரும் கோவிலுக்கு செல்வதற்காக காரில் ஏறிக்கொண்டனர். இதையடுத்து கார் கும்பகோணம் நோக்கி வந்தது.

6 பேர் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி என்ற இடத்தில் நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் அந்த கார் வந்தது. அப்போது எதிரே அரியலூரில் இருந்து நாமக்கல் நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆனந்தாயி, சிறுமி தாவனா ஸ்ரீ, முத்துச்சாமி, திருமூர்த்தி, முருகேசன் மற்றும் டிரைவர் சந்தோஷ்குமார் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

மேலும் தனபால், சகுந்தலா, திருமுருகன் ஆகிய 3 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சகுந்தலா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சகுந்தலா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்