லாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு

லாடபுரம் நீர்வளங்களை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 17:49 GMT

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் வட்டத்தின் நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் சின்னாறு உபவடி நிலப்பகுதியில் அமைந்துள்ள லாடபுரம், களரம்பட்டி, மேலப்புலியூர் ஏரிகளின் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் லாடபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடந்தது. அரியலூர் மருதையாறு வடிநில கோட்டத்தின் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன் அறிவுரையின்பேரில், நடந்த இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மருதமுத்து நிலவள நீர்வளத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார். இதில் மேலப்புலியூர், களரம்பட்டி மற்றும் லாடபுரம் ஏரிகளை தூர்வாரி மராமத்து பணி செய்து, ஏரிக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்வது குறித்தும், ஏரிகள், குளங்களை மாசுபடுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும், நீர்வளங்களை பேணிகாப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏரிகள் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் தேவராஜ், அழகேந்திரன், பெருமாள், அப்துல்ரசாக், நடராஜன், சுப்ரமணியன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்