கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

கம்பத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்ைக எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-08-11 16:35 GMT

கம்பத்தில், கம்பம்மெட்டு காலனி 9-வது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி பகுதியில் மர்ம நபர்கள் மதுபாட்டில்களை உடைத்தும், மாசுப்படுத்தி ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இதனால் மர்ம நபர்கள் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் மற்றும் குடிநீர் தொட்டி பகுதியில் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் கம்பம் மெட்டு சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கவுன்சிலர் அமுதா மற்றும் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்