கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கைது

கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-17 00:50 IST

திருச்சி பாலக்கரை கேம்ஸ் டவுன் பகுதியில் கஞ்சா விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், திருச்சி பாலக்கரை கேம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற கஞ்சா குணா (வயது 53) என்பதும், அதேபகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வரும் இவர், திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருவதும், இவர் மீது கொலை வழக்கு, அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு என்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய காகிதம், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்ற தொகை ரூ.850 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்