கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புமுன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-31 05:00 GMT

கிருஷ்ணகிரி

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தலைவர் மோகன் ரங்கா தலைமை தாங்கினார். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் காளியப்பன், மாதவன், பிரகாஷ், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, நடராஜ், காஞ்சீபுரம் ராமசாமி, கேரளா பழனிசாமி, ராணிப்பேட்டை சாரங்கன், ராயக்கோட்டை கோவிந்தன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ராணுவத்தில் கடந்த 1973-ம் ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதுவே 2006-ம் ஆண்டுகளில் பணியாற்றியவர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த பாகுபாட்டை சரி செய்ய வேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற நிலைப்பாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில், முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்