கோவை: அண்ணாமலை - ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2025-12-08 08:30 IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதேவேளை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கினார். மேலும், இந்த அமைப்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 15ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

இதனிடையே, ஓ. பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கும் டெல்லி சென்றார்.டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கோவையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை , ஓ. பன்னீர் செல்வம் நேற்று சந்தித்தார். கோவையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்