இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-06-07 00:15 IST

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பா.ஜ.க.வை சேர்ந்த சரண்சிங் எம்.பி. மீது புகார் தெரிவித்து அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சேசு தலைமை தாங்கினார். பிரேமலதா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் முத்துப்பாண்டி ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்