காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

படவேட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-19 13:16 GMT

கண்ணமங்கலம்

கணணமங்கலத்தை அடுத்த படவேட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போளூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ராகுல்காந்தி மீது பொய் வழக்குப்போடும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் படவேடு வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் சரவணன், காளசமுத்திரம் முன்னாள் தலைவர் மாணிக்கவேலு, எம்.ராமமூர்த்தி, ஆர்.பழநி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்