கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-24 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்