உழவர் செயலி குறித்து கலைநிகழ்ச்சி

கடையநல்லூர் அருகே உழவர் செயலி குறித்து கலைநிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-06-29 00:15 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே காசி தர்மம் கிராமத்தில் உழவர் செயலி குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை, தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் கடையநல்லூர் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் மூலம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் உதயகுமார் ஆலோசனின் பேரில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் மூலம் வேளாண்மை துறை திட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள் சையது பாஷிலா நஸ்ரின் மற்றும் காசிதர்மம் பஞ்சாயத்து தலைவர் சுடலை மாடத்தி, துணைத்தலைவர் தங்கம் அய்யாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் ராமநாராயணன் உள்பட அட்மா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்