கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

திருக்கடையூர் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது;

Update:2023-08-18 00:15 IST

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள திருக்கடையூர், குருவிகுளம், சர்வோ சரபோஜி ராஜபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்