வாகனம் மோதி முதியவர் பலி

Update: 2023-06-18 19:00 GMT

சூளகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா பூவதி அருகே உள்ள சிக்க பூவதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 80). கூலித்தொழிலாளி. இவர் சூளகிரி அருகே காமன்தொட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்