புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2023-07-31 00:30 IST

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

சிவகங்கை மாவட்டம் பனங்குடி பகுதியில் குடிதண்ணீர் ஊருணி உள்ளது. இந்த ஊருணியின் தெற்கு கரை பகுதியில் சுற்றுச்சுவர் இல்லை. எனவே, ஊருணியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், பனங்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் ஒரு சில இடங்களில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ேமலும் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலை சீரமைக்கப்படுமா?

பொதுமக்கள், கல்லல்.

இருள் சூழ்ந்த பகுதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராமநகர் நான்கு ரோடு சந்திப்பு, யூனியன் அலுவலகம், சிவன் கோவில் முக்கு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜிஸ்கான், தேவகோட்டை.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உழுவன்பட்டியில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த பகுதியில் சீரான மின் வினியோகம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படுமா?

தங்கம், உழுவன்பட்டி.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. பொதுமக்களின் நலன்கருதி தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இளையான்குடி.

Tags:    

மேலும் செய்திகள்