பாலூட்டும் பழங்கால சங்கு கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் பாலூட்டும் பழங்கால சங்கு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-06-24 20:53 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் பண்டைய காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று தோண்டப்பட்ட குழிகளில் பாசிமணி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால், தண்ணீர், புகட்ட பயன்படுத்திய பழங்கால சங்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,225 பொருட்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்