நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை - ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-07-07 07:11 GMT

சென்னை,

நடிகர் திலகத்தின் மகனும் பிரபல நடிகருமான பிரபு மற்றும் அவரது மூத்த சகோதரர் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், மேலும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் ஒன்றை தயாரித்து, தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களது சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்