ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை

ஆலங்குளம் செல்வராணி ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை நடந்தது;

Update:2022-10-22 00:15 IST

ஆலங்குளம்:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆலங்குளத்தில் உள்ள செல்வராணி பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ்-ல் சிறப்பு விற்பனை களை கட்டியுள்ளது.

பெண்களுக்கான பிரிவில் மும்பை மொடால் சுடிதார், மும்பை சந்தேரி சுடிதார் வகைகள் உட்பட பலவண்ணங்களில் சுடிதார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். குர்தி வகைகளில் ரிங்கிள், ஜார்ஜ்ஜெட் வகைககளை பெண்கள் அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். ஆண்களுக்கான பிரிவில் ஜாகர்ஸ், கார்கோ ஜீன்ஸ் வகைகள் என ரகரகமான பேண்ட் வகைகள் புதியதாக வந்துள்ளதையடுத்து இளைஞர்கள் விரும்பி வாங்கி சென்றனர்.

சேலை ரகங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சாப்ட் பட்டு, சாப்டி காப்பர், பிங்க் காப்பர் வகைகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. மேலும் பிராசோ புடவை, மைசூர் பட்டு, பேஸ்டல் பட்டு, ரா பட்டு, ஜுட் பட்டு, பனாரஸ் காட்டன் போன்ற விதவிதமான புடவைகள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு புடவை, சட்டை, வேஷ்டி என பரிசுகளை நிர்வாகத்தினர் வழங்குகின்றனர்.

இந்த தகவலை, அந்த ஜவுளிக்கடையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்