சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் திருச்சி எம்.பி. துரை வைகோ நடவடிக்கை மேற்கொண்டு தாம்பரம் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்தார். தற்போது இங்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நின்று செல்கிறது.
அதன்படி நேற்று மதியம் திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்ற அந்த ரெயிலுக்கு துரை வைகோ எம்.பி. தலைமையிலான ம.தி.மு.க.வினர் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் அவர் கொடியசைத்து ரெயிலின் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, அந்த ரெயிலில் பயணம் செய்தார்.