தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேரன்மாதேவி பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

Update: 2022-10-26 21:47 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 18 வார்டு கவுன்சிலர்களில் 17 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க கவுன்சிலர்கள் 8 பேர் செயல் அலுவலர் மகேஸ்வரன் முறையான அறிவிப்பு இன்றி டெண்டர் விடுவதாகவும், பொதுமக்களின் அடிப்படை தேவை குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றமால் உதாசினப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் மாதாந்திர கூட்டமானது பில் பாஸ் செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த மர ஏலத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேக்கு, தென்னை, மஞ்சக்கடம்பு உள்ளிட்ட மரங்களை ரூ.26 ஆயிரத்திற்கு ஏலம் விட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்