தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தி.மு.க. அரசைக் கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் தொடரும் ஊழல், முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவால் ஏற்படும் உயிரிழப்புகள், கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், இசக்கி சுப்பையா எம்.எல்ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மைக்கேல் ராயப்பன், ஆர்.பி.ஆதித்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், நெல்லை மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர்,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இளைஞர் அணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், மகளிர் அணி செயலாளரும், திசையன்விளை பேரூராட்சி தலைவியுமான ஜான்சிராணி, இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ், வக்கீல் ஜெயபாலன், நாங்குநேரி ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. ஆட்சியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது கள்ளச்சாராயம் விற்பது போன்றும், அதனால் பாதிக்கப்பட்டவர் இறந்து பாடையில் படுத்து கிடப்பது போன்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சித்தரித்து இருந்தனர்.