தளபதி வாழ்க ...! பாரத் மாதா கி ஜே ...! தி.மு.க. மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம் - பரபரப்பு

Update: 2022-05-26 11:17 GMT


சென்னை

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகை தருகிறார்.

மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகிறார்.

பிரதமர் மோடியை வரவேற்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். வழியெங்கும் பாஜக கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க பிரதமர் மோடியை வரவேற்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். மேளதாளம், கலை நிகழ்ச்சிகள், பதாகைகள், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

நேரு அரங்கம் செல்லும் வழியெங்கும் பா.ஜ.க.வினர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் அங்கு உள்ளனர். வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா பெரியார் வாழ்கவே, தளபதி வாழ்க டாக்டர் கலைஞர் வாழ்கவே என தி.மு.க.வினர் ஒரு பக்கம் முழக்கமிட, பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிடுகின்றனர். அதுபோலவே நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க என்றும் பாஜகவினர் உற்சாக முழக்கம் எழுப்பினர். பிரதமரும் முதலமைச்சரும் விழாவில் பங்கேற்பதால் திமுக கொடிகளும் பாஜக கொடிகளும் அருகருகே கட்டப்பட்டுள்ளன.

Live Updates
2022-05-26 12:45 GMT

புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எக்ஸ் விமானப் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும அமைச்சர்கள் வரவேற்றனர்.

சாலை மார்கமாக காரில் சென்ற பிரதமர், சாலையோரங்களில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள், பொதுமக்களைப் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் காரிலிருந்து இறங்கி சிரித்தப்படியே அனைவருக்கும் கையசைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்