முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.;

Update:2023-03-02 00:03 IST

கரூரில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். இதனையொட்டி கரூர் மேற்கு மாநகர பகுதி செயலாளர் தாரணி சரவணன் தலைமையிலும், மாநகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ் தலைமையிலும், வடக்கு மாநகர பகுதி செயலாளர் கணேசன் தலைமையிலும், தெற்கு மாநகர பகுதி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், மத்திய மேற்கு மாநகர பகுதி செயலாளர் அன்பரசன் தலைமையிலும், மத்திய கிழக்கு மாநகர பகுதி செயலாளர் கோல்டுஸ்பாட் ராஜா தலைமையிலும் அனைத்து வார்டு பகுதிகளிலும் தி.மு.க.வினர் கொடியேற்றியும், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனாக்களும், ஆட்டோ டிரைவர்களுக்கு வேட்டிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. கொடி ஏற்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் ஊராட்சியில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே அன்னதானமும் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்