தி.மு.க. மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தி.மு.க. மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.;
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி சார்பில் தச்சநல்லூர் பகுதிக்கு உட்பட்ட சிந்துபூந்துறையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்யானந்த் முன்னிலை வகித்தார்.
முகாமில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.