'விளம்பரத்திற்காக பொதுநல மனுக்களை தாக்கல் செய்யக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை

போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-19 14:21 GMT

மதுரை,

நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் மதுரை ஐகோட்டு கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நெல்லை களக்காடு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுநல மனுக்களை மனுதாரர்கள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக் கூடாது என்று தெரிவித்தனர்.

பொதுநல மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், பதில் இல்லை என்றால் பொதுநல வழக்கிற்காக ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆதாரங்கள், புள்ளி விவரங்களுடன் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுவான கோரிக்கைகளுடன் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்