கல்குவாரியில் ஆக்சிஸன் சிலிண்டர் வெடித்து டிரைவர் பலி
கல்குவாரியில் ஆக்சிஸன் சிலிண்டர் வெடித்து டிரைவர் பலியானார்.;
பல்லடம்,
பல்லடம் அருகே கல்குவாரியில் ஆக்சிஸன் சிலிண்டர் வெடித்து டிரைவர் பலியானார். வேனில் இருந்து கீழே இறக்கியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்குவாரி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் வெல்டிங்கிற்கு பயன்படுத்தும் ஆக்சிஸன் நிரப்பிய சிலிண்டர்கள் ஒரு வேனில் நேற்று கொண்டு வரப்பட்டது. அந்த வேனை கோவை மாவட்டம் சூலூர் தாலுகா தாசநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (வயது 38) ஓட்டி வந்தார். அந்த வேனில் ஏராளமான ஆக்கிஸன் சிலிண்டர்கள் இருந்தன. அந்த வேன் குவாரிக்கு வந்ததும் சிலிண்டரை ஒவ்வொன்றாக டிரைவர் சதீஷ் மற்றும் அங்கு ேவலை பார்க்கும் தொழிலாளர்கள் சீனிவாசன் (38), சிவக்குமார் (35) ஆகியோர் ேசர்ந்து ஒவ்வொன்றாக இறக்கி கொண்டிருந்தனர்.
ஒருவர் பலி
அப்போது ஒரு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் டமார் என்று வெடித்து சிதறிது. இந்த சத்தத்தால் குவாரியே அதிர்ந்தது. மேலும் சிலிண்டரின் இரும்பு பாகங்கள் பறந்து தொலைவில் சென்று விழுந்தன. மேலும் வேனின் பின்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சதீஷ் உயிரிழந்தனர்.
சீனிவாசனும், சிவக்குமாரும் பலத்த காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆக்சிஸன் சிலிண்டரை வேனில் இருந்து கீேழ இறக்கும்போது எப்படி வெடித்தது? விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கல்குவாரியில் ஆக்சிஸன் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.