திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

இலவம்பாடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடைபெற்றது.;

Update:2023-05-28 19:10 IST

அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடந்தது. காலை 10 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து துரியோதனனை படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

இதனை அடுத்து மாலை 5 மணிக்கு தீமிதி விழா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்