சிங்கப்பூரில் கொரோனா பரவல் எதிரொலி; கோவை விமான நிலையத்தில் பரிசோதனை தீவிரம்

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2024-05-23 13:45 GMT

கோவை,

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் கே.பி.1 மற்றும் கே.பி.2 எனப்படும் 2 வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிக அளவில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 21-ந்தேதி நிலவரப்படி நாட்டில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்தியேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும் எனவும், நோய் தொற்று பரவல் குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் கோவை சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்