ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தங்கத்தேர் இழுத்து வழிபாடு

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.;

Update:2023-09-22 02:21 IST

பெத்தநாயக்கன்பாளையம்:

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். 146 அடி உயர முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தியான மண்டபத்தில் தியானம் செய்த எடப்பாடி பழனிசாமி தங்கத்தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜசோழன், இணை செயலாளர் வாசுதேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், ஒன்றிய செயலாளர் முருகேசன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்