மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Update: 2023-01-12 11:30 GMT

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். அதன்படி இந்தாண்டு பார்வை குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய, காதுகேளாத, வாய்பேச இயலாத, புறஉலக சிந்தனையற்ற சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் 60 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் ஏலகிரி மலைக்கு ஒருநாள் கல்வி சுற்றுலாவாக 2 பஸ்களில் நேற்று சென்றனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்