நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் வீழ்ச்சி440 காசுகளாக நிர்ணயம்

Update: 2023-02-08 19:00 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-480, ஐதராபாத்-415, விஜயவாடா-445, மைசூரு-465, மும்பை-475, பெங்களூரு-465, கொல்கத்தா-490, டெல்லி-421.

முட்டைக்கோழி கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.74 ஆக குறைந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.1 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்