வாகனம் மோதி முதியவர் பலி

தூத்துக்குடியில் வாகனம் மோதி முதியவர் பலியானார்.;

Update:2022-06-28 20:45 IST

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் உமையண்ணன் (வயது 79). இவர் தூத்துக்குடி வி.வி.டி ரோடு அண்ணா நகர் 8-வது தெரு சந்திப்பில் ரோட்டை கடக்க முயன்றாம். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் உமையண்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த உமையண்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்