திருப்புவனம்,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம்(வயது 32). இவர் திருப்புவனம் மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கரலிங்கம் அலுவலகத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். தட்டான்குளம் அருகே வரும்போது அந்த வழியாக ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.