108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.;

Update:2022-12-05 00:24 IST

நாமக்கல்லில் 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் சுகன் பெப்சி, அருண் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட மேலாளர்கள், வாகன பராமரிப்பு மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்