அரசு, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்

அரசு, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-30 17:11 GMT

சீர்காழி:

அரசு, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

சீர்காழியில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவி கலைச்செல்வி, பூம்புகார் கல்லூரி உதவி பேராசிரியர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் நலம் குறித்து பேசினர். இதில் தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி, விதவைப் பெண்கள் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசி, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க நிர்வாகிகள் மலர்விழி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நலவாாரியம்

கைம்பெண்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கைம்பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊர்வலம்

முன்னதாக விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் ஊர்வலம் நடந்தது. சங்க நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார். ஊர்வலம் பழைய பஸ் நிலையம், கச்சேரி ரோடு, புதிய பஸ் நிலையம் வழியாக வந்து மாநாடு நடந்த இடத்திற்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்