என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-08 20:32 GMT

சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். காய்கறி வியாபாரி. இவருடைய மகன் அசோக் (வயது 32). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கும், சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

படிப்பிற்கு ஏற்ற வேலை அசோக்கிற்கு கிடைக்காததால் தந்தையுடன் சேர்ந்து காய்கறி கடைக்கு சென்று வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவு அசோக் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மன உளைச்சலுக்கு ஆளான அசோக் தனது அறைக்கு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை அவரது அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டிற்குள் அசோக் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்