என்ஜினீயரிங் மாணவர் கைது

மாணவியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-24 21:18 IST

மதுரை பேரையூரை சேர்ந்தவர் வாசுராஜா வயது (23). இவர், நாமக்கல்லில் உள்ள தனியாா் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வாசுராஜா அவருடன் நெருங்கி பழகி வந்தார்.

இந்நிலையில் அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசுராஜாவிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா வழக்குப்பதிவு செய்து வாசுராஜாவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்