மாவட்ட மைய நூலகத்தில் பொழுதுபோக்கு கண்காட்சி

மாவட்ட மைய நூலகத்தில் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்தது.

Update: 2023-05-28 20:14 GMT

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம், பலதரப்பட்ட பொழுதுபோக்கு சேகரிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து பொது அறிவை வளர்க்கும் பொழுதுபோக்கு கண்காட்சியை நேற்று நடத்தினார்கள். இந்த கண்காட்சியில் ரேடியோ, அமெச்சூர்ரேடியோ, வான்கோள்கள், ரெயில்வேதுறையின் பழங்கால பயணச்சீட்டு, அஞ்சல்தலைகள், சுடுமண் சிற்பங்கள், தொல்லுயிர் எச்சங்கள், பழங்கால பொருட்கள், இசைக்கருவிகள், சங்க கால நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதனை பொது அறிவை வளர்க்கும் பொழுதுபோக்கு கண்காட்சி சங்கத்தினர் காட்சிபடுத்தினார்கள்.

கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, பழங்கால பொருட்கள் குறித்த அரிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். முடிவில் ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்