வீடுகள் கணக்கெடுக்கும் பணி
நொகனூர் ஊராட்சியில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.;
தேன்கனிக்கோட்டை
தளி ஒன்றியத்தில் மொத்தம் 50 ஊராட்சிகள் உள்ளன. இதில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு இல்லாத, ஓட்டு வீடு, குடிசை மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நொகனூர் ஊராட்சியில் அலுவலர்கள், ஓட்டு வீடு, குடிசைகள் குறித்து வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், ஊராட்சி தலைவி மஞ்சுளா கோவிந்தராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.