உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-06-05 19:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் உதயசூரியன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் உரிய இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, ஊராட்சி சாலைகள் ஓரத்திலும் பல வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்