எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமத்துவம் தான் திராவிட மாடல் - கி.வீரமணி

திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமத்துவம் தான் என கி.வீரமணி கூறியுள்ளார்.

Update: 2022-09-05 11:14 GMT

திருவாரூர்,

திருவாரூரில் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு கி.வீரமணி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

சனாதனம் என்பது தான் ஆரிய மாடல். சனாதனம் என்பது இன்னாருக்கு இதுதான் என்கிற மனு தர்மம். திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமத்துவம். சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி என்ற அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சட்ட அமைப்பினை மாற்ற முயல்வது தான் சனாதனமாகும். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவம் நாள் என தி.மு.க. அரசு அறிவித்தது.

சமூக நீதி, சமத்துவம் என்பது திராவிட மாடல். இந்த தத்துவத்தை பாதுகாப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம். அதனால் சனாதனத்திற்கு எதிரி இந்திய அரசியல் சட்டம் தான். சனாதன எதிர்ப்பு என்பது மனிதநேய ஆதரவு, வளர்ச்சி என்ற அர்த்தமாகும்.

திராவிட, சுயமரியாதை, பகுத்தறிவு தத்துவங்கள் முழுக்க சமூக விஞ்ஞான தத்துவங்களாகும். திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஒட்டியவர்கள் கருணாநிதி தான். எனவே தெற்கு வீதிக்கு கலைஞர் வீதி பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.       

Tags:    

மேலும் செய்திகள்