ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில்கிறிஸ்தவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினாா்கள்;

Update:2023-05-30 02:35 IST

ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ.க்கு சொந்தமான வணிக வளாகத்தின் கடையை ஒருவருக்கு உணவகம் நடத்துவதற்காக வாடகைக்கு விட்டதை கண்டித்தும், சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் குழு கூட்டத்தை கூட்டாமல் ரூ.50 லட்சம் செலவு செய்த விவகாரத்தில் தணிக்கை குழு அமைத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஈரோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் ஆலயத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்