16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 3 பேர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தஞ்சை,
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது 24), தமிழ்ச்செல்வன் (26), லட்சுமணன் (19) ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.