கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

தேவிபட்டினம், மண்டபம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-02 18:45 GMT

பனைக்குளம், 

உள்வாங்கிய கடல்

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம் கடல் பகுதி. இந்த கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, உள்ளிட்ட ஊர்களில் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி இருந்ததால் அந்த பகுதி முழுவதும் மணல் பரப்பாகவே இருந்தது.

இதன் காரணமாக கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தரை தட்டியபடி நின்றன. பகல் 12 மணிக்கு பிறகு மீண்டும் கடல் நீர் ஏறி அந்த பகுதியானது இயல்பு நிலைக்கு திரும்பியது.

வழக்கமானது

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வீசும் இந்த காற்று சீசனில் கடல் நீர் வற்றுவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றுதான். இதனால் பயப்பட தேவையில்லை என்று கூறினர்.

அதேபோல் மண்டபம் தோணித்துறை எதிரே உள்ள வடக்கு கடல் பகுதியிலும் கடல் நீர் வற்றி உள்வாங்கி காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு அந்த கடல் பகுதியும் இயல்பு நிலைக்கு திரும்பியது. மண்டபம், தேவிபட்டினம் பகுதியில் கடல் உள் வாங்கி காணப்பட்டதால் அப்பகுதிபரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்