ஈரோட்டில் பரபரப்புஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; பெண் கைது

ஈரோடு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-15 00:27 GMT

ஈரோடு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அபாய ஒலி

ஈரோடு கனிராவுத்தர்குளம் ஈ.பி.பி.நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து நேற்று முன்தினம் அபாய ஒலி சத்தம் கேட்டது. மேலும், ஏ.டி.எம். மையத்தில் இருந்து அதன் கட்டுப்பாட்டு அறைக்கும் எச்சரிக்கை தகவல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் ஒரு பெண் கையில் சுத்தியலுடன் நின்று கொண்டு இருந்ததை கண்டனர்.

உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த நசிமாபானு (வயது 35) என்பதும், அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், இதற்காக அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ஒயரை துண்டித்தபோது அபாய ஒலி ஏற்பட்டதும்,' தெரியவந்தது.

கைது

மேலும் அவருடைய கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அதனால் தனது மகனுடன் வசித்து வந்த நசிமாபானு தறிப்பட்டறையில் வேலைக்கு சென்று வந்தார். பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததால், ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக நசிமாபானுவை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தில் பெண் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்