தொழிலாளியிடம் பணம் பறிப்பு

களக்காடு அருகே தொழிலாளியிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-09-17 01:27 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீணவன்குளத்தை சேர்ந்த கண்ணு மகன் பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ.200 கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி, மிரட்டி, அவரிடமிருந்து ரூ.150-ஐ பறித்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பரமசிவனை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்