விவசாயி கொலை வழக்கு: நெல்லை கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்

விவசாயி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.;

Update:2023-09-02 03:04 IST

சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை அருகே தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரை கடந்த 28-ந்தேதி மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவியை சேர்ந்த குத்தாலம், மாரியப்பன், ராஜ்குமார், சதீஸ், முருகசெல்வம் என்ற செல்லா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவியை சேர்ந்த சரவணன் (வயது 21), ராசுகுட்டி (20) ஆகியோர் நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்